மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் 
இந்தியா

22 மாவட்டங்களில் கரோனா அதிகரிப்பு: சுகாதாரத்துறை

நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. தற்போதை கரோனா பரவல் குறித்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கினார்கள்.

“நாட்டில் 7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் கேரளத்தில் 7, மணிப்பூரில் 5, மேகாலாயாவில் 3 மாவட்டங்கள் அடங்கும்.  

மேலும், 62 மாவட்டங்களில் மட்டுமே நாள்தோறும் 100 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பின் வார சராசரி தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், கடந்த வாரங்களில் குறைந்த விகிதத்தை ஒப்பிடும்போது சற்று மெதுவாகவே குறைந்து வருகின்றது. இதுகுறித்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT