ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
ஐபிஎல் 2026 சீசனில் சிறப்பாக பந்துவீசியுள்ள சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன் குறித்து...
ஐபிஎல் 2026 சீசனில் சிறந்து எகானமியில் சிறப்பாக பந்துவீசியுள்ளவர்கள் பட்டியலில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் நாட்டைச் சேர்ந்த அகீல் ஹொசைன் (33 வயது) சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் அறிமுகமானார். அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வென்றுள்ளதும் அவர் இல்லாத போட்டிகளில் தோல்வியுற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி மூன்றில் வென்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக சிஎஸ்கேவின் பந்துவீச்சு காரணமாக இருக்கிறது.
Advertisement
Advertisement
சுழல் பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன் பவர்பிளேவில் பந்துவீசி எகானமி (ஒரு ஓவருக்கு எத்தனை ரன்கள் வழங்குவார்) ஆகவும் இருக்கிறார் என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில், இதுவரையிலான போட்டிகளில் அகீல் ஹொசைன் மட்டுமே குறைவான ரன்களை வழங்கி, எகானமியில் 6.3ஆக இருக்கிறார். குறைந்த பட்சம் 10 ஓவர்கள் வீசியவர்களில் அகீல் மட்டுமே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அகீல் ஹொசைனுக்கு சிறப்புப் போஸ்டர்களை சிஎஸ்கே வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. அகீல் ஹொசைனுக்கு அடுத்து ஜடேஜா, சுனில் நரைன் அடுத்தடுத்த வரிசையில் இருக்கிறார்கள்.
இனிவரும் போட்டிகள் அகீல் ஹொசைன் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டுமென கிரிக்கெட் விமர்சகர்களும் சிஎஸ்கே ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.
அடுத்தடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணியையும் சேப்பாக்கத்தில் எதிர்கொள்ளவிருக்கிறது.
Most Economy bowler in ipl 2026 is csk spinner Akeal Hosein
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.