இந்தியா

புதிய அரசு எப்படி இருக்கும்? கர்நாடக முதல்வர் பொம்மை விளக்கம்

புதிய அரசு மக்கள் மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும் என கர்நாடக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

DIN


புதிய அரசு மக்கள் மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும் என கர்நாடக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா திங்கள்கிழமை ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கு கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை கூறியது:

"தற்போதைய சூழலில் இது மிகப் பெரிய பொறுப்பு. ஏழைகளின் நலனுக்கு செயல்பட பாடுபடுவேன். இது மக்கள் சார்பு மற்றும் ஏழை மக்கள் சார்புடைய அரசாக இருக்கும்" என்றார் அவர்.

இதுகுறித்து காபந்து முதல்வர் எடியூரப்பா கூறியது:

"பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக பசவராஜ் பொம்மையை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளோம். பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி. பிரதமரின் தலைமையின்கீழ் பொம்மை கடுமையாக உழைப்பார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT