முகப்பு
இந்தியா

அமித் ஷாவுடன் இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர்.

இந்தியா

அமித் ஷாவுடன் இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சந்தித்தனர். 

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11.20 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், தம்பிதுரை, ரவீந்திரநாத் குமார், சந்திரசேகர் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, நேற்று முன்தினம் தனித்தனியாக தில்லி புறப்பட்டுச் சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.  

முழு கட்டுரையைப் படிக்க →