இந்தியா

மாநிலங்களிடம் 2.28 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: சுகாதாரத்துறை

DIN

மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 45,73,30,110 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 43,80,46,844 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. மேலும், 2,28,27,959 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.

கூடுதலாக 24,11,000 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 44.19 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT