மும்பை சோட்டா ராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி 
இந்தியா

மும்பை சோட்டா ராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

மும்பை சோட்டா ராஜன் உடல்நலக் குறைவால் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ANI

மும்பை சோட்டா ராஜன் உடல்நலக் குறைவால் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையில் இருந்த சோட்டா ராஜன் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜூலை 27ஆம் தேதி தீடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோட்டா ராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேடப்பட்டு வந்த தாதாக்களில் ஒருவரான சோட்டா ராஜன், 2015- ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி நகரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். அவா் மீது 68 வழக்குகள் போடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் மட்டும் பணம் பறித்தல் உள்ளிட்ட 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT