மத்தியப் பிரதேசம் : சிறைச் சுவர் இடிந்து விழுந்ததில் 22 காயம்
மத்தியப் பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் நிறைந்த இந்த மாவட்ட சிறையில் இன்று (சனிக்கிழமை ) அதிகாலை 5.30 மணிக்கு தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.
எதிர்பாராத நேரத்தில் விழுந்த சுவரின் அருகே தூங்கிக்கொண்டிருந்த 22 கைதிகள் காயமடைந்தனர். அதில் ஒருவர் படுகாயம் அடைந்ததால் அவரை குவாலியர் அரசு மருத்துவமனைக்கும் மற்றவர்களை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.