தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை: உஜ்ஜைன் நகராட்சி முடிவு
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களின் பலர் இதுவரை முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களின் பலர் இதுவரை முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.
உஜ்ஜைன் நகராட்சியைச் சேர்ந்த 30 சதவீத ஊழியர்கள் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வராததல், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஊதியம் என்ற விதிமுறையை உருவாக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.
கரோனா தடுப்பூசி என்பது, தொற்றுப் பரவலுக்கு எதிரான ஒரு ஆயுதம். அதனை மக்கள் தாமாக முன் வந்து செலுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, கட்டாயமல்ல என்ற விதிமுறைக்கு எதிராக உஜ்ஜைன் நகராட்சியின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
Advertisement
இது குறித்து உஜ்ஜைன் நகராட்சி ஆணையர் கூறுகையில், நகராட்சி ஊழியர்கள் பலரும் பொதுமக்களுடன் நேரிடையாக தொடர்பில் உள்ளவர்கள். இவர்களுக்கு கரோனா தடுப்பூசி மிக அவசியமாகிறது. எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.