இந்தியா

'பிரதமரின் அவலம்' - ராகுல் சுட்டுரை

DIN

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி அடைந்துள்ளதையும் இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டு 'பிரதமரின் அவலம்' என்று  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) -7.3 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிகவும் மோசமான வீழ்ச்சி என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் ராகுல் காந்தி, ஜிடிபி வீழ்ச்சி குறித்தும் பிரதமரை சாடியுள்ளார். 

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி அடைந்துள்ளது, இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்று கூறிய அவர், இது பிரதமரின் அவலம் என்று தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் பதிவுடன் வேலைவாய்ப்பின்மை எவ்வளவு அதிகரித்துள்ளது என்ற வரைபடம் ஒன்றையும் இணைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT