இந்தியா

மகாராஷ்டிரத்தில் பதிவான குற்ற வழக்குகளின் விவரம் கேட்கிறது உயர் நீதிமன்றம்

PTI


மும்பை: கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த நிலையில், மாநிலத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் பற்றி மும்பை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வாறு இருந்தது என்பது குறித்து அறிக்கை அளிக்கவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றின்போது, சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டாலும், புதிய கைது நடவடிக்கைகளால், சிறைகளில் நெரிசல் குறையவில்லை என்று மாநில அரசின் வழக்குரைஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த தகவலை அடுத்து, பெருந்தொற்று காலத்தில் பதிவான குற்ற வழக்குகளின் விவரத்தை நீதிமன்றம் கோரியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT