இந்தியா

‘ஒரு கோடி பேர் வேலையிழப்பு: பிரதமர் மோடியே பொறுப்பு’: ராகுல்காந்தி

DIN

கரோனா தொற்று பரவலால் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழந்ததற்கு பிரதமர் மோடியே பொறுப்பு என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு முதல் அலையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தொற்று பரவல் மிகத்தீவிரமாகப் பரவியதால் பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இந்தப் பொதுமுடக்கம் காராணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பால் நாட்டில் ஒரு கோடி பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளதாக இந்தியப் பொருளாதார மத்திய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது நாட்டில் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடி மட்டுமே பொறுப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT