பெங்களூருவின் கரோனா பலி விகிதம் 8 வாரங்களில் 4.82% ஆக உயர்வு
பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் கரோனா பரவல் குறைந்து வந்தாலும், கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் இன்னமும் கவலை தரும் வகையிலேயே உள்ளது.
பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் கரோனா பரவல் குறைந்து வந்தாலும், கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் இன்னமும் கவலை தரும் வகையிலேயே உள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 7 நாள்களில் கரோனா பலி விகிதம் ஒரு நாளைக்கு 400 ஆக உள்ளது. இதில், பெங்களூருவில் மட்டும் ஒரு நாளைக்கு 250 பலி எண்ணிக்கை பதிவாகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஆறு நாள்களில் கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இது குறித்து வரும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 5 - 11ஆம் தேதியில் பலி விகிதம் 0.50 சதவீதமாக இருந்த நிலையில், இது மே 3 - 9ல் 1.16 சதவீதமாகவும், மே இறுதியில் 4.82 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
Advertisement
இந்தக் காலக் கட்டத்தில் பெங்களூருவில் மட்டும் 1833 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், கரோனா பெருந்தொற்றைப் பொருத்தவரை பாதிப்பில் கடும் உயர்வு ஏற்பட்டு குறையும் நேரத்தில், நேர்மாறாக பலி எண்ணிக்கைக் கடுமையாக உயர்ந்து வருவது மிகவும் அரிதானதாகக் கூறப்படுகிறது.