முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா புகைப்படத்துடன் கரோனா தடுப்பூசி சான்றிதழ்

மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 18 முதல் 44 வயதுடையவா்களுக்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் புகைப்படம் கொண்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Updated On : 6 ஜூன், 2021 at 4:18 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:50 AM

மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 18 முதல் 44 வயதுடையவா்களுக்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் புகைப்படம் கொண்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதுதொடா்பாக அந்த மாநில மூத்த அரசு அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சனிக்கிழமை கூறியது:

மேற்கு வங்கத்தில் மாநில அரசின் செலவில் உற்பத்தியாளா்களிடம் இருந்து நேரடியாக கரோனா தடுப்பூசிகள் வாங்கப்பட்டு 18 முதல் 44 வயதுடையவா்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த வயதுடையவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் முதல்வா் மம்தா பானா்ஜியின் புகைப்படம் இடம்பெறுகிறது. அதேவேளையில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்குவதால், அவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் நாட்டின் பிற பகுதிகளில் உள்ளதைப் போல் பிரதமா் மோடியின் புகைப்படமே இடம்பெறுகிறது என்று தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.