இந்தியா

தில்லியில் வீடு வீடாக கரோனா தடுப்பூசி: கேஜரிவால்

DIN


தில்லியில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தில்லியில் கரோனா இரண்டாம் அலை பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 7) முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தில்லியில் பேசிய முதல்வர் கேஜரிவால், 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் ஒரு மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்.

தில்லியில் பொதுமக்கள் பலர் தடுப்பூசி செலுத்துக்கொள்ள முன்வருவதில்லை. இதனால், மண்டல அளவிலான அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இரு நாள்களில் தங்களது பணிகளைத் தொடங்குவார்கள்.

கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் பரவியுள்ள வதந்திகளை போக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT