மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,989 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,989 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 10,989 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 10,989 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 58,63,880 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 16,379 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 261 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 55,97,304 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1,01,833 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 1,61,864 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 95.45 சதவிகிதம். இறப்பு விகிதம் 1.74 சதவிகிதம்.