இந்திய எல்லைக்குள் வண்ணங்களுடன் வந்த புறா: தீவிரவாதிகளின் குறியீடா என விசாரணை 
இந்தியா

இந்திய எல்லைக்குள் வண்ணங்களுடன் வந்த புறா: தீவிரவாதிகள் குறியீடா என விசாரணை

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் எல்லை வழியாக வந்த புறாவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

DIN


பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் எல்லை வழியாக வந்த புறாவை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

புறாவின் இரு இறக்கைகளிலும் நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே வண்ணங்கள் பூசப்பட்டுள்ளதால், அது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானிலிருந்து புறா ஒன்று வந்துள்ளது.

ராஜஸ்தானின் கங்காநகர் பகுதியில், உள்ளூர் மக்களின் உதவியுடன் காவல் துறையினர் அதனைக் கைப்பற்றினர். அதன் இரு இறக்கைகளிலும் நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. 

இறக்கைகளில் ஆங்காங்கே தீட்டப்பட்டுள்ள வண்ணங்கள் குறியீடுகள் போன்று உள்ளதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: காஸாவில் 24 பேர் பலி, 54 பேர் படுகாயம்

இப்படித்தான் எங்கள் நாட்டை 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியாக்கினாய்... டிராவிஸ் ஹெட்டை புகழ்ந்த ரவி சாஸ்திரி!

தொடர் கனமழை: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

விஜய் மக்கள் சந்திப்பு: குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு அனுமதி இல்லை?

இத்தாலியின் ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற அஜித் குமார்!

SCROLL FOR NEXT