தில்லியில் புதிதாக 134 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 134 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,32,778 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 467 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 14,05,927 பேர் குணமடைந்துள்ளனர். 24,933 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 1,918 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.