இந்தியா

கேரளத்தில் புதிதாக 12,078 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 12,078 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"கேரளத்தில் புதிதாக 12,078 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,16,507 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 10.37 சதவிகிதம். இதுவரை மொத்தம் 2,23,97,780 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  

கடந்த நாள்களில் 136 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,581 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 94 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 11,250 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 657 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 11,469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 27,41,436 பேர் குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 99,859 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT