முகப்பு
கட்சியில் இணைய வந்த பாஜகவினர் மீது கிருமிநாசினி தெளித்து வரவேற்ற திரிணமூல் கட்சியினர்
இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜகவிலிருந்து திரிணமூல் கட்சியில் இணைய வந்தவர்கள் மீது கிருமிநாசினி தெளித்து வரவேற்ற சம்பவம் நடந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
கட்சியில் இணைய வந்த பாஜகவினர் மீது கிருமிநாசினி தெளித்து வரவேற்ற திரிணமூல் கட்சியினர்
பகிர்:

மேற்கு வங்கத்தில் பாஜகவிலிருந்து திரிணமூல் கட்சியில் இணைய வந்தவர்கள் மீது கிருமிநாசினி தெளித்து வரவேற்ற சம்பவம் நடந்துள்ளது.

நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் தங்களை திரிணமூல் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

அந்தவகையில் மேற்குவங்கத்தில் இளம்பசார் பகுதியில் பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த பாஜகவினர் மீது திரிணமூல் கட்சியினர் கிருமிநாசினி தெளித்து வரவேற்றனர். பாஜகவிலிருந்து வந்தவர்களை தூய்மையாக்க சானிடைசர் தெளித்ததாக திரிணமூல் கட்சியினர் தெரிவித்தனர்.

திரிணமூல் கட்சியினரின் இந்த செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →