முகப்பு
கரோனாவுக்கு பலியானவர்களில் இவர்கள்தான் அதிகம்: எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி
இந்தியா

கரோனாவுக்கு பலியானவர்களில் இவர்கள்தான் அதிகம்: எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி

நாட்டில் கரோனாவுக்கு பலியானவர்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை விடவும் 50 வயதுக்கும் குறைவானவர்களே அதிகம் என்று தில்லி, எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
கரோனாவுக்கு பலியானவர்களில் இவர்கள்தான் அதிகம்: எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி
பகிர்:

புது தில்லி: நாட்டில் கரோனாவுக்கு பலியானவர்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை விடவும் 50 வயதுக்கும் குறைவானவர்களே அதிகம் என்று தில்லி, எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதாவது, கரோனாவுக்கு பலியானோர் வயது விகிதத்தைக் கண்டறியும் வகையில், கடந்த 2020 ஏப்ரல் 4 முதல் ஜூலை 24 வரையிலான காலக்கட்டத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை அடிப்படையாக வத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், 654 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் 247 பேர் பலியாகிவிட்டனர். அதன்படி பலி விகிதம் 37.7 சதவீதமாகும். இந்த நோயாளிகளில் வயது வாரியாக 18 - 50, 51 - 65, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.

பலியானவர்களில் 42.1 சதவீதம் பேர் 18 - 50 வயதுக்குள்பட்டவர்களாகவும், 34.8 சதவீதம் பேர் 51 - 65 வயதுக்குள்பட்டவர்களாகவும், 23.1 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். அதாவது, 65 வயதுக்கு அதிகமானவர்களை விடவும் 50 வயதுக்குள்பட்டவர்களின் பலி விகிதமே அதிகமாக இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதேவேளையில், மருத்துவமனையில் பலி விகிதம் 18.2 சதவீதமாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பலியானவர்களின் பலி விகிதம் 36.1 சதவீதமாகவும் இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் 46 சிறார்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 6 பேர் கரோனாவுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முழு கட்டுரையைப் படிக்க →