மாநிலங்களின் கையிருப்பில் 78 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு
மாநிலங்களின் கையிருப்பில் 78 லட்சம் கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மாநிலங்களின் கையிருப்பில் 78 லட்சம் கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 31,83,36,450 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 31,04,91,565 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 78,44,885 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 15,18,560 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கைய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.