முகப்பு
இந்தியா

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்: முகநூல், கூகுளுக்கு நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தல்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்ற முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
கூகுள்
பகிர்:

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்ற முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனாளா்களின் குறைகளைத் தீா்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகள் புதிய விதிகள் மூலமாக நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்நிலையில், நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →