ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேஜஸ்வி யாதவ்
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் ராஷ்டிரிர ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் தவணை ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசியை புதன்கிழமை செலுத்திக் கொண்டார்.
அவருடன் அவரது சகோதரர் தேஜ் பிரதாப்பும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.