முகப்பு
இந்தியா

ரயில் பயணிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: ரயில்வே

மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ள கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 30 ஜூன் 2021, 12:20 pm IST
ரயில் பயணம் மேற்கொள்ளத் தடுப்பூசி கட்டாயம்: ரயில்வே
பகிர்:

மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ள கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

Advertisement

Advertisement

அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்திற்கு மாநில அரசுகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு அனுமதி வழங்கியுள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.