இந்தியா

நாட்டில் கரோனா அதிகரிக்கக் காரணம் இதுதான்: மத்திய அரசு கணிப்பு

DIN

புது தில்லி: நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதற்குக் காரணம் புதிய வகை கரோனா பரவல் அல்ல என்றும், நாடு முழுவதும் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளே என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா அதிகரித்து வரும் மாநிலங்களுக்குச் சென்றிருக்கும் மத்தியக் குழுவினர், அங்கு ஆய்வு நடத்தி அளிக்கும் அறிக்கை மற்றும் அவர்களது கருத்துகளின் அடிப்படையிலேயே கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக் காரணம் என்ன என்பது தெரிய வரும், ஆனால், கரோனாப் பரவல் அதிகரிக்க, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளே காரணம் என்று தெரிவதாகவும் நீதி ஆயோக் திட்ட சுகாதாரத்துறை உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் கூறுகிறார்.

புதிய வகைக் கரோனா வேகமாகப் பரவுவதே, கரோனா பாதிப்பு அதிகரிப்புக்குக் காரணம் என்பது எந்த மாநிலத்திலும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 1.51 சதவீதமாகவே இருக்கிறது. குணமடைந்தோர் விகிதம் 97 சதவீதமாக இருக்கிறது. மொத்த கரோனா  நோயாளிகளில் மகாராஷ்டிரம், கேரளம் மட்டுமே 67.84 சதவீத நோயாளிகளைக் கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளையில், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு மத்தியக் குழு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT