முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி: பி.எஸ்.எஃப். வீரர் பலி, நால்வர் காயம்

ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் பி.எஸ்.எஃப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
ராஜஸ்தானில் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி: பி.எஸ்.எஃப் வீரர் பலி, நால்வர் காயம்
பகிர்:

ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் பி.எஸ்.எஃப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். 

செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெய்சால்மரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) வீரர்கள் ஐந்து பேர் மீது குண்டு பாய்ந்துள்ளது. 

இந்நிலையில் 3 பேர் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் போக்ரானில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சதீஷ்குமார் (32) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும், இந்த சம்பவம் குறித்து இறந்தவரின் குடும்பத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →