முகப்பு
இந்தியா

நாட்டில் 23,285 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு

நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 23,285 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:


புது தில்லி: நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 23,285 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 23,285 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,13,08,846-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 117 போ் உயிரிழந்தனா்.

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,58,306 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,09,53,303 போ் குணமடைந்தனா்.  நாட்டில் தற்போது 1,97,237 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி, வியாழக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 22 கோடியே 49 லட்சத்து 98 ஆயிரத்து 638பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், வியாழக்கிழமை மட்டும் 7,40,345 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை  வரையிலும் 2 கோடியே 61 லட்சத்து 64 ஆயிரத்து 920 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 
 

முழு கட்டுரையைப் படிக்க →