தில்லி - டேராடூன் ரயிலில் தீ விபத்து
தில்லி டேராடூன் இடையே செல்லும் சதாப்தி விரைவு ரயிலில் தீ விபத்து நேரிட்டது. உடனடியாக ரயிலை நிறுத்தி தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிக்கப்பட்டது.
தில்லி டேராடூன் இடையே செல்லும் சதாப்தி விரைவு ரயிலில் தீ விபத்து நேரிட்டது. உடனடியாக ரயிலை நிறுத்தி தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிக்கப்பட்டது.
தில்லியிலிருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் சென்றுகொண்டிருந்த சதாப்தி விரைவு ரயில் கன்ஸ்ரோ பகுதியருகே செல்லும்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சதாப்தி ரயிலின் 4வது பெட்டியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தைத் தொடர்ந்து உடனடியாக ரயில்வே தீயணைப்புத்துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் தீ பரவலைக் கட்டுப்படுத்தினர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக உத்தகண்ட் காவல்துறை தலைவர் அசோக் குமார் தெரிவித்தார்.