முகப்பு
இந்தியா

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: இந்தியாவில் மேலும் 26,291 போ் பாதிப்பு

நாட்டில் இன்று புதிதாக 26,291 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் இன்று புதிதாக 26,291 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று காலை நிலவரப்படி, புதிதாக 26,291 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,85,339-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு மேலும் 118 போ் உயிரிழந்தனா். இதனால், பலியானோா் எண்ணிக்கை 1,58,725-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 2,19,262-ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து இன்று மேலும் 17,455 குணமடைந்தனர். 
இதன்மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 1,10,07,352ஆக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆா்) வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை மொத்தம் 22,74,07,413 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 7,03,772 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 
மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments