அதிகரிக்கும் கரோனா பரவல்: முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை (மார்ச் 17) ஆலோசனை
மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து நாளை (மார்ச் 17) மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து நாளை (மார்ச் 17) மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 6-வது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.14 கோடியாக உயர்ந்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் கரோனா பரவலால் முக்கிய நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
Advertisement
இந்நிலையில் மீண்டும் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.