‘லாபம் தனியாருக்கு, நஷ்டம் தேசத்திற்கு’: வங்கிகள் வேலை நிறுத்தத்திற்கு ராகுல் ஆதரவு 
இந்தியா

‘மோடி ஆட்சியில் லாபம் தனியாருக்கு, நஷ்டம் தேசத்திற்கு’: ராகுல் விமர்சனம்

வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

DIN

வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தனியாா் மயமாக்கல் கொள்கைக்கு எதிராக ஒன்பது வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யு.எப்.பி.யு) மாா்ச் 15,16 ஆம் தேதிகளில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தது. 

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “அரசுவங்கிகளை தனியாருக்கு மோடி அரசு விற்று வருகிறது. லாபம் தருபவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி நஷ்டத்தை தேசியமயமாக்கி வருகிறார். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரியமானவளே... பிரியங்கா மோகன்!

பொன்னிற வேளை / சேலை... சாக்‌ஷி அகர்வால்!

ஹரியாணா: மாதவிடாய் பெண்களுக்கு பல்கலை.யில் நடந்த அவலம்!

பசும்பொன்னில் மூன்று பேரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமா? அண்ணாமலை

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT