பஞ்சாபில் மார்ச் 31 வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல்
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் பல்வேறு நகரங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே 9 மாவட்டங்களில் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை கரோனா ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மார்ச் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேசமயம் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் மட்டுமே இயங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 2387 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.