முகப்பு
இந்தியா

உ.பி.யில் பயங்கரம்: 10-வது படிக்காதவர் செய்த மகப்பேறு அறுவை சிகிச்சையால் தாய் - சேய் பலி

மருத்துவக் கவனக் குறைவு காரணமாக, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் மிகப் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
கோப்புப்படம்
பகிர்:


லக்னௌ: மருத்துவக் கவனக் குறைவு காரணமாக, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் மிகப் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

கிராமத்தில் இயங்கி வந்த சிறு மருத்துவமனையில் 10-ஆம் வகுப்புக் கூட படிக்காத நபர், பிளேடை வைத்து மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த நிலையில், தாயும் சேயும் பலியாகினர்.

ராஜேந்திர சுக்லா என்ற 30 வயது உதவியாளர், கர்ப்பிணிக்கு, பிளேடைக் கொண்டு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை வெளியே எடுத்துள்ளார். குழந்தை வெளியே வந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. தாயும், அதிகப்படியான ரத்தப் போக்கினால் கவலைக்கிடமான நிலையில், வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது குறித்து, மருத்துவ கவனக் குறைவு காரணமாக தனது மனைவியும் குழந்தையும் பலியானதாக ராஜாராம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், 8-வது தேர்ச்சி பெறாத ஷுக்லா என்பவர் இந்த தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அந்த மருத்துவமனையை ராஜேஷ் சாஹ்னி என்பவர் நடத்தி வந்த நிலையில், அங்கு அறுவை சிகிச்சைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்த பதிவு செய்யாத மருத்துவமனையை, போலி மருத்துவர்கள் மற்றும் சில உதவியாளர்களின் உதவியோடு நடத்தி வந்துள்ளார் சாஹ்னி. 

அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய எந்த வசதியும் இல்லாததும், ஊழியர் ஷுக்லா கர்ப்பிணிக்கு பிளேடைக் கொண்டு மகப்பேறு அறுவை சிகிச்சைகளை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, ஷுக்லாவும், சாஹ்னியும் கைது செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →