முகப்பு
இந்தியா

பஞ்சாபில் பயனற்றுபோன இரவு ஊரடங்கு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பகல் நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தைகளில் கூடியது மேலும் கரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பகல் நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தைகளில் கூடியது மேலும் கரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமிர்தசரஸில் அதிக அளவில் கரோனா பரவி வருவதால், இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் ஞாயிற்றுக் கிழமையான இன்று (மார்ச் 21) அதிக அளவிலான மக்கள் சந்தைகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் குவிந்தனர்.

அமிர்தசரஸிலுள்ள சப்ஸி கூட்டுறவு சந்தையில், காய்கறி உள்ளிட்ட வீட்டுற்கு தேவையான பொருள்களை வாங்க அதிக அளவிலான மக்கள் முகக்கவசம் அணியாமல் குவிந்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று ஒருநாளில் மட்டும் 195 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →