முகப்பு
இந்தியா

அரிய நோய்களுக்கான மருத்துவக் கொள்கை: மார்ச் 31-க்குள் அறிவிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

அரிய நோய்களுக்கான தேசிய சுகாதாரக் கொள்கையை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்து அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

அரிய நோய்களுக்கான தேசிய சுகாதாரக் கொள்கையை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்து அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற நோய்களுக்கு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் சிகிச்சை முறைகளுக்கான தேசியக் கூட்டமைப்பை (என்சிஆர்டிடி) அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தடையற்ற, இலவச சிகிச்சையை வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம் சிங் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 அரிய நோய்கள் சிகிச்சைக்காக என்சிஆர்டிடி தவிர, எய்ம்ஸில் ஒரு குழுவும், ஒரு நிதித் தொகுப்பும் அமைக்க வேண்டும். என்சிஆர்டிடி கூட்டமைப்பில் பயோடெக்னாலஜி துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) தொடர்பான அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் இடம் பெற வேண்டும்.
 ஆராய்ச்சி, உள்நாட்டு சிகிச்சையின் வளர்ச்சி, மருந்துகளின் உற்பத்தி மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் நபர்களைச் சேர்ப்பது ஆகியவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
 மேலும், 2020-ஆம் ஆண்டின் அரிய நோய்களுக்கான தேசிய சுகாதாரக் கொள்கையை மார்ச் 31 அல்லது அதற்கு முன்னதாக மத்திய அரசு இறுதி செய்து அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments