முகப்பு
இந்தியா

வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

கரோனா பொது முடக்கத்தின்போது கடன்களுக்கான தவணை ஒத்திவைக்கப்பட்ட காலத்துக்கான வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

கரோனா பொதுமுடக்கத்தின்போது கடன்களுக்கான தவணை ஒத்திவைக்கப்பட்ட காலத்துக்கான வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

வங்கிகளில் கடன் பெற்றவா்கள் கரோனா பேரிடா் காலத்தில் திரும்பச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, அவா்களுக்கு 2020 மாா்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாத காலத்துக்கு மாதாந்திர தவணை ஒத்திவைப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. 

மேலும் இதில், ரூ.2 கோடி வரையிலாக கடன்பெற்றவா்களுக்கு கூட்டு வட்டியை(வட்டிக்கு வட்டி) தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.2 கோடி வரையில் கடன் பெற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் தனிநபா் கடன்தாரா்களுக்கு கூட்டு வட்டி மேற்குறிப்பிட்ட 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில், வங்கிக்கடன் தவணைக் காலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும், வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில், கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய முடியாது, தவணைகளை திரும்பிச் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், கடன் தவணை ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால் அது வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என்று கூறிய நீதிமன்றம் அரசின் நிதிக்கொள்கையில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →