ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில் மூவர் காயமடைந்துள்ளனர். (கோப்புப்படம்) 
இந்தியா

ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி

ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில்  மூவர் காயமடைந்துள்ளனர்.

DIN

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில்  மூவர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல்  விஜயகுமார் கூறுகையில், 'ஸ்ரீநகரில் வெளிப்புறத்தில் அமைந்துள்ள லவேபுரா பகுதியில் வியாழனன்று சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீரென்று  துப்பாக்கிச்சூடு நடத்தினர்; இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை  நடத்தி வரும் வேளையில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT