முகப்பு
இந்தியா

உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மாயாவதி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி (கோப்புப்படம்)
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

தில்லியிலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த கேரள கன்னியாஸ்திரிகள் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை அடைந்தபோது  மதமாற்றம் செய்பவர்கள் எனக் கூறி பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் தாக்க முற்பட்டனர். 

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவிவருவதாகவும் இவை உடனடியாக களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கன்னியாஸ்திரிகள் மீது நிகழ்ந்த பாதுகாப்பற்ற சூழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →