லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு
யூனியன் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை மாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
யூனியன் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை மாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
வியாழக்கிழமை மாலை 5.07 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ள சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.