முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 36,902 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 36,902 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
மகாராஷ்டிரத்தில் மேலும் 36,902 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 36,902 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ரத்தில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. 

இதைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசும் திணறி வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 36,902 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 26,37,735ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவுக்கு ஒரேநாளில் மேலும் 112 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 53,907ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 2,82,451 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 17,019 பேர் குணமடைந்தனர். இதுவரை 23,00,059 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →