முகப்பு
இந்தியா

நாக்பூரில் ஹோலியன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூட உத்தரவு

நாக்பூரில் ஹோலி (மார்ச் 29) அன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்று அந்நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
கோப்புப் படம்.
பகிர்:

நாக்பூரில் ஹோலி (மார்ச் 29) அன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்று அந்நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்ரத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. 
இங்கு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாக்பூரில் ஹோலி (மார்ச் 29) அன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்று அந்நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாக்பூர் நகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாக்பூரில் ஹோலி (மார்ச் 29) அன்று சந்தைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும். அத்தியாவசிய கடைகளான காய்கறி, கறிக்கடை போன்றவை மதியம் 1 மணி வரை அனுமதிக்கப்படும். 
மார்ச் 28-29 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் கூடவும் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் அனுமதி இல்லை என்றார். நாக்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4095 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 35 பேர் பலியாகியுள்ளனர். தற்போதை நிலவரப்படி 36,936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →