'முதல்வர் அடிக்கல் நாட்டிய கல்லில் கட்டடமே கட்டலாம்' - ப. சிதம்பரம் பேச்சு
முதல்வர் அடிக்கல் நாட்டிய கல்லில் கட்டடமே கட்டலாம் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் அடிக்கல் நாட்டிய கல்லில் கட்டடமே கட்டலாம் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய ப.சிதம்பரம், முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டிய செங்கல்களை வைத்து ஒரு பெரிய கட்டடமே கட்டலாம்.
கூவத்தூர் செல்லும்வரை பழனிசாமி என்று ஒருவர் இருந்ததே எனக்குத் தெரியாது.
ஆலங்குடி தொகுதியில் 60 நாள்களுக்கு முன் மாற்றுக்கட்சியில் இருந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்து அப்பகுதி அதிமுகவினருக்கு அக்கட்சி துரோகம் இழைத்துவிட்டது என்று கூறினார்.