முகப்பு
இந்தியா

நந்திகிராம் என்னுடைய தொகுதி; நான் இங்குதான் இருப்பேன்: மம்தா பேச்சு

அரசியல் ரீதியாக பாஜகவை மண்ணில் புதைத்து நந்திகிராம் தொகுதியிலிருந்தும் மேற்குவங்கத்திலிருந்தும் வெளியேற்றுங்கள் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் பேசினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
பகிர்:

அரசியல் ரீதியாக பாஜகவை மண்ணில் புதைத்து நந்திகிராம் தொகுதியிலிருந்தும் மேற்குவங்கத்திலிருந்தும் வெளியேற்றுங்கள் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் பேசினார்.

முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் தொகுதியான நந்திகிராமில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது பேசிய அவர், 

நான் நந்திகிராமில் நுழைந்துவிட்டேன். இனி இது என்னுடைய இடம், நான் இங்குதான் இருப்பேன். எந்த காரணத்துக்காகவும் ஒருபோதும் வெளியேற மாட்டேன். 

நந்திகிராம் தொகுதி மக்களே, பாரதிய ஜனதாவை அரசியல் ரீதியாக புதைத்து, நந்திகிராம் மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து வெளியேற்றுங்கள். 

வேறு எந்தத் தொகுதியிலிருந்தும் நான் போட்டியிட்டிருக்கலாம். ஆனால், இந்த தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் இந்த தொகுதி தாய்மார்கள்  மற்றும் சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் நந்திகிராமை தேர்ந்தெடுத்தேன் என்று பேசியுள்ளார். 

மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இன்று ஒரேநேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேற்குவங்கத்தில் கடந்த தோ்தல்களில் பவானிபூா் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி வரும் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் நந்திகிராம் தொகுதியில் களம் காண்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →