கர்நாடகத்தில் புதிதாக 37,733 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,733 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,733 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 37,733 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 11,64,398 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 217 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16011 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 21,149 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,64,398 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 4,21,436 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.