இந்தியா

அதிக விலைக்கு ஆக்ஸிஜன் விற்பனை: 4 பேர் கைது

DIN

தில்லியில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த சகோதரர்கள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் கருவி, 115 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை அவர்களிடமிருந்து கைப்பற்றினர். 

ஆக்ஸிஜன் செறிவூட்டியை கள்ளச் சந்தையில் பதுக்கி பின்னர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் ஜானக்புரி பகுதியைச் சேர்ந்த 2 சகோதரர்கள் உள்பட சாகர்பூர் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

அவர்கள் ஜானக்புரி பகுதியில் கிடங்கு வைத்து ஆக்ஸிஜன் உபகரணங்களையும், செறிவூட்டிகளையும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை  மேற்கொண்ட காவல்துறையினர், ஆக்ஸிஜன் வழங்கும் கருவி, 115 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT