முகப்பு
இந்தியா

பொதுமுடக்கத்தைத் தவிர வேறு வழியில்லை: ஹரியாணா

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தைத் தவிர வேறு வழியில்லை என்று ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:09 PM
ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்
பகிர்:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தைத் தவிர வேறு வழியில்லை என்று ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஹரியாணாவில் ஊரடங்கு பிறப்பிப்பதில் விருப்பம் இல்லை. ஆனால் கரோனாவைக் கட்டுப்படுத்த அதனை விட்டால் வேறு வழியில்லை. 

மக்கள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதாகத் தெரியவில்லை. இதனால் தொற்று பரவல் தான் அதிகமாகிறது. இதனால்  திங்கள் கிழமை (மே 3) முதல் 7 நாள்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள முழுமுடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →