மும்பையில் சிறைக்கைதி கரோனாவுக்கு பலி
நவி மும்பையின் தலோஜா சிறையிலிருந்த 22 வயது சிறைக்கைதி கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
நவி மும்பையின் தலோஜா சிறையிலிருந்த 22 வயது சிறைக்கைதி கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
சிறைக்கைதி கடந்த சில நாள்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி தசாரி முதன்முதலில் மும்பையின் ஜே ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து, மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த கைதி 22 வயதுடைய விஷால் ஆனந்த் தசரி என்று அடையாளம் காணப்பட்டது.
Advertisement
கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் குற்றத்துக்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.