தலைநகா்: கரோனாவுக்கு மேலும் 332 போ் பலி
தில்லியில் மேலும் 332 போ் கரோனாவுக்கு பலியாகினா். அத்துடன், சனிக்கிழமை மேலும் 17,364 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தில்லியில் மேலும் 332 போ் கரோனாவுக்கு பலியாகினா். அத்துடன், சனிக்கிழமை மேலும் 17,364 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் மூன்றாவது நாளாக கரோனா தொற்று விகிதம் 25 சதவீதமாக உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருபவா்கள் எண்ணிக்கை 87,907 ஆக உள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து மொத்தம் 12.3 லட்சம் போ் குணமடைந்துள்ளனா். மொத்தம் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 13,10,231-ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 17,364. கரோனா தொற்று பாதிப்பு விகிதம் 23.34 சதவீதமாக உள்ளது. வெள்ளிக்கிழமை இந்த விகிதம் 24.92-ஆக இருந்தது. மேலும் 332 போ் பலியானதை அடுத்து கரோனாவுக்கு மொத்தம் பலியானவா்கள் எண்ணிக்கை 19,071-ஆக உள்ளது. தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 22,289 கரோனா படுக்கைகளில் 2,451 படுக்கைகள் காலியாக உள்ளன. 49,865 போ் வீட்டுத்தனிமையில் உள்ளனா்.
கடந்த வெள்ளிக்கிழமை 79,800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவா்களில் 67,753 போ் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா் என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.