முகப்பு
இந்தியா

நாகாலாந்தில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு

நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
நாகாலாந்தில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு
பகிர்:

நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மே 14-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மே 21-ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக முதல்வர் நெய்பியூ ரியோ தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மே 5-ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஏழு நாள்களுக்கு மாநில தலைநகர் கோஹிமா மற்றும் வணிக மையமான திமாபூரின் சில பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அரசு அறிவித்தது. 

இருப்பினும் தினசரி தொற்று மேலும் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.