முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இதுவரை 2 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: சுகாதாரத் துறை

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி 16-ல் கரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 1,91,73,383 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
மகாராஷ்டிரத்தில் இதுவரை 2 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: சுகாதாரத் துறை
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி 16-ல் கரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கியதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 1,91,73,383 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், 

நேற்று ஒரேநாளில் 3,16,506 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட1,37,186 பேர் இரண்டாவது டோஸையும், 99,178 பேர் முதல் டோஸைப் பெற்றனர்.

Advertisement

நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, மாநில அரசு 18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும் இருப்பு இருக்கக்கூடிய கரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்தப்படும் என்று கூறினார்.

சுகாதாரப் பணியாளர்களில், இதுவரை 11,38,242 பேர் முதல் டோஸையும் 6,89,134 இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். மேலும், 15,51,670 முன்னணி தொழிலாளர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது, 6,79,527 பேர் இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர்.

18-44 வயதுக்குள்பட்ட 6,27,281 பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.

முன்னதாக 45 வயதிற்குள்பட்டவர்களில், தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 1,20,31,019 பேர் முதல் டோஸையும், 24,56,510 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.

சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் புதன்கிழமை கூறியதாவது, 

மே 20 முதல் மாநிலத்திற்கு அதிக அளவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பிறகு கரோனா தடுப்பூசி தடையில்லாமல் செலுத்தப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments